அகாத்தா ரோசன்யஸ் (1814–1874) (Till fridens hem). சௌ. ஜான் பாரதி (ஜீன் 19, 2020),
இராகம்- ரோசன்ஸ் டாப்ட், பிரான்ஸ் குஸ்டவ் ஆஸ்கார் (1827–1852) (🔊 pdf nwc).
சமாதானம், என் தந்தை இல்லத்தில்
ஆம் என் சோர்ந்த உள்ளம் களைத்தே எங்குதே,
உம் இல்லமே நான் ஏங்கி நோக்கியே ஆம்
என் மீட்பரே என்றும் சமாதானமாகவே,
இவ்வுலகில் அமைதி இல்லையே,
எம் நம்பிக்கை குறைவு நொருங்குண்டோம்,
எம் பார்வையும் குறைவு காணோமே மங்குதே,
ஏதுமே காணோமே.
நாம் போற்றுவோம் ஆம் காலம் வேகம் செல்லுதே பாராய்
நிறைவேரும் வாக்குத்தத்தங்கள்.
நாம் நம்பினால் ஆம் காண்போம் ஆசீர்வாதம்
நாம் காத்து நின்றால் நன்மைகள் நம்மை தொடரும்.
ஆம் நாம் மறந்தாலே வேதனைதான்,
நாம் நம்பினால் காண்போமே மகிமையே,
என்றும் ஆனந்திக்கவே காண்போமே நாம் மகிமையே,
நித்ய வாழ்விலன்றோ?
என் மீட்பரே, நான் உம்மோடென்றும் என்றென்றுமே
நான் உம்மோடிருந்தே உம்மை விடாமல்,
என் சோர்விலும் என் வேதனைகள் ஊடேயுமே
நீர் மாத்ரம் தருவீர் ஆசீர் என்றுமே.
என் ஆண்டவா நான் உம்மோடிருந்தாலே,
மற்றேதுமே வேண்டாம் ஆம் ஒழிந்தோடும்,
உம்மோடு நான் ஆசீர் பெற்றே என்றுமே இன்பமாகா,
என்றென்றும் சதாகாலம்.