🡅 🡇 🞮

வல்ல பிதாவே, இதும் வார்த்தை

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். லூக்கா 8:8
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

அனாமதேய ஸ்கேன்டிநேவியன் தோற்றம். திருச்சபை கவிதை, வில்லியம் அகஸ்டஸ் முல்லன்பர்க் 1823 (Al­migh­ty Fa­ther, Bless the Word). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (பிப்ரவரி 6, 2009), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

டியூக் ஸ்டிரீட், 1793 ஜான் சி ஹேட்டன் அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது (🔊 ).

வல்ல பிதாவே, இதும் வார்த்தை,
யாம் கேட்டுணர்ந்தோமே இந்நேரம்,
எம் மனதிலும் அதோர் வித்தைப்போலே,
வளர்ந்துப்பின் பலன் தரவே.

போற்றுகிறோம் உந்தன் கிருபைகட் காய்,
எம் வாழ்வில் உம் அன்பை உணர்ந்தே,
இப்போதிங்கே தொழுதிடும் எல்லோரையும்
முடிவினில் சேரும் உம் வீடே.