கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.@சங்கீதம் 71:5
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

மைக்கேல் புரூஸ் (1746–1767) (Al­migh­ty Fa­ther of Man­kind). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 26, 2020),

நியூ பிரிட்டன் (🔊 pdf nwc).

அப்பா நீரே எம் தந்தையே,
என் விசுவாசம் உம்மேல்,
என் துன்பகாலம் நெருங்க,
நம்புவேன் உம்மையே.

தயவாய் காக்கும் தேவன் நீர்,
தொட்டில் முதல் முற்றும்,
உம் பாதுகாப்பில் இருந்தேன்,
தாயின் கரு முதல்.

சிறு பிராயம் முதல் என்னை,
காத்தீர் என் வாலிபத்தில்,
என் காலம் உம்முடன் வர,
நான் சாகும் மட்டுமே.

உம் வல்லமை நான் உணர்வேன்,
உம் தோள் வலிமையும்,
நீரே என் மீட்பர் என்றென்றும்,
இம்மட்டும் நீர்தானே.

என் வாழ்வின் வேதனை காலம்,
நீர் தூரே செல்லாமல்,
காணாமல்போகும் நண்பர்போல்,
போர்கால வேளையில்.

உம்மை நம்ப நீர் ஈந்தீரே,
என் வாழ்வு துவங்கி,
திக்கற்றோனாய் அனாதயாய்,
திரிந்தபோதுமே.

முதிர் வயதிலும் என்னை,
துன்பம் சூழ் வேளையில்,
துக்கித்தலையாமல் நீரே,
என் சொற்ப்ப நாட்களில்.

என் வாழ்வினில் என்றும் உம்மை,
நம்பி என் முடிவிலும்,
நான் மாண்டபின்னும் போற்றவே,
காலம் இல்லா காலம்.