இப்பெலவீன தேகமே,
விழுந்தே ஆம் சாகட்டும்,
இம்மாயமாம் என் தேகமே,
ஒழிந்தேகி போகட்டும்,
தூயோரோடு நான் தோன்றியே,
என் வாஞ்சைபோல் ஓய,
அதென்றோ? எந்தன் ஏக்கமே,
மீட்பரின் மார்பிலே.
விண்வாழ்வின் கிரீடம் சூடவே,
சிலுவை நான் பற்றினேன்,
இங்கும் அங்கும் நான் சென்றேகினும்,
துன்பமோ? அதின்பமோ?
பொருமையாய் எந்தன் காலமே
மீட்பர் வருமட்டும்,
இவ்வேழை கண்ணீர் போக்கியே,
தம் வீடே சேர்ந்திட.
கிறிஸ்தெனக்கன்பாய் ஈந்தாரே
என் கண்களெதிரே,
ஜீவாற்றின் தூய வாழ்வுதான்,
விண்லோக விருட்சமே,
என் கண்கள் காணும் பிரகாசம்
அவ்வின்பமும்தானே,
வெண்ணங்கியோடே தூய்மையாய்,
குருத்தோலையுடனே.
ஆமேன்.