தூதரே கல்லை புரட்டுங்கள்,
சாவே உன்தன் பிடி விடுவாய்,
மீட்பர் உயிர்த்தார் பாருங்கள்,
மரணத்தை ஜெயித்தே,
மரணத்தை ஜெயித்தே.
பாரீர் மீட்பர் தூதரே,
எக்காளங்கள் ஊதுவீர்,
பூவின் எல்லை எங்குமே,
இன்ப ஓசை கேட்கட்டும்,
இன்ப தொனி கேட்கட்டும்.
தூயோரே நீர் காணுவீர்,
மா மகிமை காட்சியே,
விண்ணின் விளிம்பில் தோன்றியே,
மேலோர் தாழ்ந்தோர் காணவே,
மேலோர் தாழ்ந்தோர் காணவே.
விண்ணின் வாசல்கள் திறந்ததே,
வேந்தர் வேந்தன் வந்திட,
எல்லையில்லா எத்திசையும்,
அவர் ஆள்வார் என்றென்றுமே,
அவர் ஆள்வார் என்றுமே.
விண் தூதரே போற்றுவீர்,
யாழ் எக்காள இசை முழங்க,
பேரானந்த ஓசையாய்,
இன்பமாய் தொனித்திட,
இன்பமாய் தொனித்திட.
ஓவ்வோர் ஓசையும் முழங்கட்டும்,
மாய்ந்தே மரணம் வீழ்ந்ததே,
எங்கே நரகை ஆண்ட ராசன்?
சாவே உந்தன் கூர் எங்கே?
சாவே உந்தன் கூர் எங்கே?