உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.@லூக்கா 2:14
உருவப்படம்
ராபர்ட் லோரி
1826–1899

கிறிஸ்துமஸ் ஆனுவல், எண் 8 ல், ராபர்ட் லோரி, 1877 (நியூயார்க், பிக்லோ & மெய்ன்) (The An­gel’s Song) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (2018),

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

இருண்ட இராவில் உருண்டு இறங்கி
மகிமை பாடல் விண்ணில் பேரோசையாக,
இனிய கீதம், சேர்ந்தே இசைக்க,
பாடினர் தூதர் பண்ணுடன் இனிதே,

பல்லவி

உன்னதத்திலே, தேவனுக்கு மகிமை
என்றும், சதா காலம், அதெதிரொலிக்கும்,
மீண்டும் மீண்டும்,
மண்ணோர் பாடி ஆர்ப்பரிக்க

விந்தை கண்டு, வியந்த மேய்ப்பர்,
தூதர் நற்செய்தி, கேட்டு மகிழ்ந்தே,பாடி
விரைந்தே சென்று, தொழுவம் கண்டு,
விண்ணின் கீதம் வானம் அதிர்ந்திட,

பல்லவி

இயேசு மீட்ப்பர், தந்தையின் ஆசீர்,
பெற்றிந்த பூவில், மாந்தர் சாபம் தீர்க்கவே,
துக்கம் மிகுந்தே, வெறுக்கப்பட்ட,
பாவம் போக்கும் ஆட்டுக்குட்டி இவர்,

பல்லவி