🡅 🡇 🞮

எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:10

அனாமதேய, 1860 (Arise and Sing, Dis­pel Your Fears). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (ஏப்ரல் 20, 2020), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இராகம் டியூக் ஸ்ட்ரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 ).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

எழும்பிப்பிரகாசி பயம் நீக்கி,
கேள் இன்பம் பொங்கும் நற்செய்தி,
தூய ஒளி பிரகாசிக்க,
இராவின் இருள் பயம் அகல.

பேரின்பம் எங்கும் பரவிடுதே,
தூதர் இறங்கி தெறிவிக்க,
எங்கும் நற்செய்தி சென்றடைய,
ஆனந்த கீதம் எதிரொலிக்க.

நீதியின் சூர்யன் தோன்றினார் பார்,
பூவில் ஆசீர் பொழிந்திடவே,
ஒவ்வோர் உள்ளமும் பணிந்திடட்டும்.
பிறந்திரா உலகமும் பாடிடட்டும்.