🡅 🡇 🞮

நீரோடைபோல் அமைதியாய்

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன். ஏசாயா 66:12
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

எலி கோர்வின், 1878 (As Flows the Ri­ver). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (ஜூன் 17, 2020), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

வில்லியம் சேவெஜ் பிட்ஸ் (1830–1918) (🔊 ).

உருவப்படம்
வில்லியம் பிட்ஸ்
1830–1918

நீரோடை போலமைதியாய்,
பாயும் கடல் நோக்கியே,
அவர் அன்பு பாயும் என்னை நோக்கி
என்றும் விடாமல் அவர் அன்பு,

பல்லவி

அமைதியாய் பாயும் தாழ்மாய்,
அவர் அன்பு என்னை நோக்கி,
பாயும் நதி போல என்றும் விடாமலே
அவர் அன்பு என் மீது.

அவர் நேசித்திடும் பிள்ளைமேல்,
என்றும் பயம் இல்லையே,
கண்ணீர் துடைத்தன்பாகவே
என்றும் அவர் நடத்துகிறார்,

பல்லவி

உள்ளத்தில் அமைதி தந்து,
ஆம் ஆழ்கடல் போலவே,
என் உள்ளம் அன்பாய் மகிழ்ந்தே
என்றும் இன்பமாக பாடியே,

பல்லவி

சூரியன் மறையும் அமைதி,
மேகங்களுக்கப்பாலே,
சூராவளி செல்லுமே
நான் தேடும் அமைதி தருவார்,

பல்லவி