அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.@சங்கீதம் 102:24

ஸ்சால்டர் எண் 274–(பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா யுனைட்டட் பிரஸ்பிடேரியன் போர்ட் ஆப் பப்ளிஷர்ஸ் 1912) (Be­fore My Jour­ney Is Com­plete). சௌ. ஜான் பாரதி (மே 3, 2020),

இராகம் டியூக் ஸ்டிரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

என் பிரயாணம் முற்றும் முன்பே,
என் பெலன் காலம் தீருமுன்,
தவறாதென்னை தப்புவியும்,
தந்தேன் என் நாட்கள் உம் கரம்.

என் வாழ்நாளை நீர் குறைக்காமல்,
என்றென்றும் நீரே ஆள்கிறீர்,
இப்பூவின் அஸ்திபாரம்தான்,
விண்மீனையும் சூர்யசந்திரனும்.

பூமியும் வானும் ஒழிந்திடுமே,
அணிந்திட்ட வஸ்திரம் களைந்தார்போல்,
என்றென்றும் வாழ்ந்தே ஆள்கிரீர்,
காலங்கள் யாவும் பணிந்திடும்.

உம் ஊழியரின் பிள்ளைகளும்,
கண்முன்னே நீரே வைத்தீரே,
மகிமையும் கனமும் பெறுவாரே,
நீர் தயவாலே ஈகிறீர்.