மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.@யோவான் 1:29
portrait
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1688 (Be­hold the Glo­ries of the Lamb). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 8, 2020),

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

இதோ காண்பாய் தெய்வாசனம்,
தம் தந்தை ஸ்தலத்தில்,
தேவாட்டுகுட்டி நாமத்தில்
முன் கேளாகீதமே.

மூத்தோர் தொழ அப்பாதமே,
பின் சபையோர் வணங்கவே,
மணம் வீசும் எம் காணிக்கை
இன் கீதவாத்யமே.

தூயோரின் வேண்டுதல் அது,
பாமாலை பாடலும்,
கனிவாய் கேட்பார் இயேசுவே
நாம் போற்ற ஏற்கிறார்.

விண் தந்தையே யார் காணுவார்,
உம் ஆழ் இரகஸ்யங்கள்,
யார் திறப்பார் ஜீவ சுருள்
கூடுமோ முத்திரையும்.

உம் ஆணை தாமே மேற்கொள்வார்,
தகுந்தோர் அவரண்டை,
இறையாண்மையின் திறவுகோல்
விண் மரண நரகிற்கும்.

பலியுண்ட குமாரனே,
சதா துதி புகழுண்டாம்,
மீட்பு மகிமை ஆனந்தம்
என்றும் உம் சிறசின் மேல்.

உம் தயவால் எமை மீட்டீரே,
எம்மை கட்டவிழ்த்தே,
இராஜாக்கள் போதகருமாய்
உம்மோடென்றும் ஆள.

இப் பூமியும் இயற்கையும்,
உம் ஆளுகையின் கீழ்,
நீக்கும் தாமத நாட்களை,
உம் வாக்கு நிறைவேற.