எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.@மத்தேயு 6:11
உருவப்படம்
ஜான் சென்னிக் (1718–1755)
தேசிய உருவப்படத்தொகுப்பு அரங்கம்

button

ஜான் சென்னிக், 1741 (Be Pre­sent at Our Ta­ble, Lord). சௌ. ஜான் பாரதி (ஜுன் 6, 2020),

ஓல்டு ஹண்ரட்த், லுயிஸ் போர்கியோஸ், ஜெனீவன் சால்டர், 1551 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

இம்மேசைக்கு நீர் வாருமே,
யாம் வணங்கும் இடம் எங்குமே,
உம் ஆசீர் தாரும் படைப்பிற்கெல்லாம்,
யாம் உம் வீட்டில் அன்றும் உம்மோடு.

இவ்வுணவுக்கு எம் நன்றி,
எம் வாழ்வில் ஆரோக்யத்திற்கும்,
உம் கரத்தாலே உணவுண்டு,
அன்றன்றுள்ள எங்கள் ஆகாரம்.

எல்லா நன்மைகட்காகவும்,
கிறிஸ்துவின் இரத்தத்திற்குமே,
மன்னாவாய் ஆன்மா போஷித்தே,
விண்ணின்று வந்த அப்பமாய்.