இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.@மத்தேயு 5:16
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

அன்னா பெல் ரசல், 1917 (Be a Ray of Sun­shine). சௌ. ஜான் பாரதி (மே 26, 2020).

அடிலேய்ட், ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ் (🔊 pdf nwc).

portrait
ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ்
1846–1945

சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
ஒளிர்வாய் அவர்க்காய், இருள் அகற்றி,
துக்கித்தேர்க்கு இன்பம் கண்ணீர் துடைத்தே,
ஆசீர்வாதமாக எங்கே சென்றாலும்,

பல்லவி

ஒளி வீசு நீயும் எங்கு சென்றாலும்,
மீட்பருக்காய் நீயே பிரகாசமாக.

சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
ஆற்றி தேற்றி அன்பாய் தாழ்ந்தோர் மேலோங்க,
தயவான வார்த்தை புன்முறுவலும்,
அவர் பாரம் நீங்க அனைவருக்கும்,

பல்லவி

சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
இன்முகமே வேண்டும் நீ தருவாயே,
இவ்வுலகின் சோகம் நீயும் நீக்கலாம்,
மகிழ்வித்தே நீயும் சூர்ய ஒளிபோல்,

பல்லவி

சூர்யனின் கதிர்போல் எங்கே சென்றாலும்,
பிரகாசமாய்த்தோன்றும் உந்தன் கிரீடத்தில்,
மற்றோரின் பிரகாசம் உன்மீதும் வீசும்,
இன்பமாய் விண்வீடு கண்ணில் வைப்பாயே.

பல்லவி