அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.@சகரியா 13:1
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஏடன் ரீ. லட்டா (1839–1915) (Bless­ed Be the Fount­ain). ஹென்றி சௌத்விக் பெர்கின்ஸ் மற்றும் வில்லியம் வா. பென்ட்லி இவர்களின் தி ரிவர் ஆப் லைப் (பாஸ்டன் மாசசூசட்ஸ் ஆலிவர் டிட்சன் 1873). சௌ. ஜான் பாரதி (2018),

ஹென்றி சௌ. பெர்கின்ஸ் (1833–1914) (🔊 pdf nwc).

portrait
ஏடன் ரீ. லட்டா
1839–1915

ஆசீர் பெற்ற இரத்த ஊற்றே,
இவ்வுலகில் இரங்கியே,
இறை மகன் இயேசுவாக,
உந்தன் தழும்பால் குணமானோம்,
தூர திரிந்தோனாய் நின்றேன்,
வேதனைகள் துன்பம் சேர்ந்தது,
குற்றமற்ற ஆட்டின் இரத்தம்,
கொண்டு கழுவினால்தா சுத்தமாவேன்.

பல்லவி

வெண்மை பனிபோல் வெண்மை பனிபோல்,
குற்றமற்ற ஆட்டின் இரத்தத்தால்,
என்னை கழுவினால் சுத்தமாவேன்.

முள்ளிலான கிரீடம் பூண்டார்,
அவர் சிலுவையில் வெற்றி கொண்டார்,
கோர பாடு வேதனைத்தாங்கி,
அவர் பட்ட பாடு வீணே போகுமோ?
என்னை ஆங்கே கொண்டே செல்ல,
இங்கே செய்த பாவம் நீங்க,
சிலுவையில் தந்த இரத்தம், கொண்டு
கழுவினால்தான் சுத்தமாவேன்.

பல்லவி

அப்பா எங்கோ திரிந்தலைந்தேன்,
எப்போதும் மனம் போன போக்கெல்லாம்,
இரத்தாம்பரத்தின் சிவப்பாய்,
தண்ணீர் போதா அதை சுத்தமாக்கிட,
உந்தன் ஊற்றை அண்டி நிற்கிறேன்,
முற்றும் வாக்குதத்தம் நம்பியே,
உந்தன் அன்பின் தூய இரத்தம்,
கொண்டு கழுவினால்தான் சுத்தமாவேன்.

பல்லவி