அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.@வெளி 19:6
உருவப்படம்
பெலிசியே கிலாடுனி
1716–1796
National Portrait Gallerybutton

தெரியாத ஆசிரியர் (Come, Thou Al­migh­ty King). சௌ. ஜான் பாரதி, ஜனவரி 11, 2019.

இத்தாலியன் ஹிம், பெலிசியே கிலாடுனி, லாக் மறுத்துவமனையிலிருந்த சிற்றாலயத்தில் பாடப்பட்ட இராகங்கள், சங்கீதங்களும் பாமாலைகளும் எனும் தொகுப்பிலிருந்து 1769 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

வாரும் வான் இராஜனே
பா தாரும் நாவிலே, போற்றிடவே,
வல்ல எம் தந்தையே
வெற்றியின் வேந்தரே
வந்தெம்மை ஆளுமே சதாகாலம்.

வார்த் தையின் மாம்சமே,
பட்டயம் கொண்டுமே,ஜெபம் கேளும்,
உம் வார்த்தை வென்றிடும்
தூயாவி ஜீவனே நீர்
வந்தெம்மீதிலே இரங்கிடும்.

தேற்றரவாளரே,
தெய்வீக சாட்சியே,இவ்வேளையில்,
வல்லமை தேவன் நீர்,
எம் நெஞ்சம் ஆளுமே
விட்டகலாதிரும் உம் ஆவியால்.

மூவரில் ஒன்றாம் நீர்,
மகிமை மாட்சியும், என்றென்றுமே,
உம் மகா மேன்மையே யாம்
காண கேட்க்கிறோம்
என்றும் எக்காலமும் அன்பாய்த்தொழ.

ஆமேன்.