அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.@I சாமுவேல் 7:12
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ராபர்ட் ராபின்சன் (Come, Thou Fount of Ev­ery Bless­ing). 1758 ஆம் ஆண்டின் பெந்தேகொஸ்தே ஞாயிற்றிற்காக எழுதப்பட்டது, ஏஞ்சல் ஆலியிலுள்ள கிறிஸ்து நாதர் ஆலய தொகுப்பிலிருந்து, பிஷப்கேட் 1759. சௌ. ஜான் பாரதி, அக்டோபர். 26, 2018.

நெட்டில்டன், வெயித்தின் புனித இசை களஞ்சியம் இரண்டாம் பாகம் ஜான் வெய்த் 1813 (🔊 pdf nwc).

உருவப்படம்
ராபர்ட் ராபின்சன்
1735–1790

ராபின்சனின் 14ஆம் வயதில் அவன் தாயார் அவனை சிகை திருத்தமும் சிகையலங்காரமும் கற்க லண்டனுக்கு அனுப்பிவைத்தார், ஆனால் அவனது குரு அவனுக்கு வேலைசெய்வதைவிட படிப்பதில் அதிக நாட்டம் இருப்பதை உணர்ந்தார்.

தன் 17 ஆம் வயதில் கிறிஸ்துவுக்குள் வந்து மெத்தடிஸ்ட் போதகரானார், பின்னர் பாப்டிஸ்ட் திருச்சபைக்கு சென்று இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜில் போதகரானார். அனேக பாடல்களையும் மறை நூல்களையும் இயற்றினார்.

இவரது வாழ்வின் பிற்காலம் மிக கடினமான காலங்களாக இருந்திருப்பது இப்பாடலைப்பற்றிய பின்வரும் நிகழ்ச்சி தெளிவாக்குகிறது. ஒரு நாள் பாடல்புத்தகத்தை ஆராய்ந்து கொண்டிருந்த ஒரு சகோதரி தான் மென்மையாக ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை விரும்புகிறீரா என கேட்க, கண்ணீருடன்: சீமாட்டியே, இப்பாடலை பல வருடங்களுக்குமுன் எழுதியது இந்த ஏழையும் சந்தோஷமற்றும் இருக்கிற நான்தான் என்று அந்நாளில் எனக்கிருந்த மகிழ்ச்சியை நான் இப்போது அனுபவிக்க கூடுமானால் ஆயிரம் உலகங்களையும் தர தயாராகவுள்ளேன் என்றாராம்.

ஆசீர்வாத ஜீவ ஊற்றே,
எந்தன் நெஞ்சம் பூரிக்க,
வாரும் தாரும் என்றும் கேளும்
எந்தன் மகிழ் கீதமே,
உம் ஆனந்த பாடல் கற்பியும்,
விண்ணின் தூதர் போலவே,
கன்மலைமேல் கண்ணை வைத்தேன்
மீட்பின் மெய் மா அன்பிதே.

எந்தன் உள்ளம் துக்கித்தாலும்
மாம்சம் பாவம் நீக்கியே,
நீரே தாரும் பாக்ய ஆசீர்
இன்றே நான் துவங்கினேன்,
தேவனே நீர் எபிநேசர்,
உம்மால்தானே இங்குள்ளேன்,
நம்பி நானும் உமதன்பால்
வீடடைவேன் முடிவில்.

இயேசுவே நீர் என்னை கண்டீர்
திக்கற்றோனாய் திரிந்தேன்,
நீரே என்னை தீங்கு நாளில்
இரத்தம் சிந்தி மீட்டீரே,
உம் தயவு என்றும் என்னை,
இரட்சித்தென்னை காத்ததே,
மாளும் மானிடன் நான் என்ன
சொல்ல கூடும் என்நாவால்.

உம் கிருபையின் கடன் என் மேல்
சேர்ந்தே அனுதினம், நல் ஆண்டவா
கட்டி வையும் சிதரும் என் நெஞ்சத்தை,
விட்டோடுமே, எந்தன் ஆன்மா,
உம்மையே என் நேசரே,
இதோ தந்தேன் எந்தன் உள்ளம்,
பூட்டி வையும் உம்மிடம்.

பாவம் செய்ய இயலா நாள்
உம்முகம் நான் காண்பேனே,
இரத்தத்தாலே தோய்த்த அங்கி
அணிந்தும்மை பாடுவேன்,
வாருமே என் ஆண்டவரே,
தந்தேன் எந்தன் ஆன்மமே,
உந்தன் தூதர் அனுப்பிடும்
நித்ய எல்லை சேர்க்கவே.