அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.@மத்தேயு 2:16
விளக்கம்

மறுமலர்ச்சி கால கிறிஸ்துமஸ் பாடல் (🔊 pdf nwc). 15ஆம் நூற்றாண்டின் ஷியார்மென் மற்றும் டெய்லர் அவர்களின் ஏரோதுவின் குற்றமற்ற குழந்தைகளின் படுகொலை சித்தரிக்கப்பட்டடுள்ள அலங்கார ஓவியம் இங்கிலாந்தின் கவென்டிரி எனும் நகரத்திலுள்ளதால் அதன் பெயர் இப்பாடலுக்கு சூட்டப்பட்டுள்ளது. சௌ. ஜான் பாரதி (2018).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

பல்லவி

தாலேலோ தங்க இயேசு பாலனே,
ஆரிரோ ஆராரோ,

எவ்வாறு நாம் இருப்பினும்
இன்நாளை ஏற்போமே,
இவ்வேழைப்பிள்ளை உறங்கவே,
தாலேலோ தாலேலோ.

ஏரோதின் கோபம் பொங்கவே,
கொலைவெறி கொண்டே,
அவன் சேனை ஊரெங்கிலும்
சிறாரை மாய்த்ததே.

அதென் பழி உன் மீதிலே,
எண்ணி இந்நாளிலே,
உம் பரிவிலே சொல் பாடல் இல்லை,
தாலேலோ, தாலேலோ.