அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.@சங்கீதம் 78:39
உருவப்படம்
எட்வார்டு கசவால்
1814–1878

எட்வார்டு கசவால், 1858 (Days and Mo­ments Quick­ly Fly­ing). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 8, 2019),

தூய சில்வெஸ்டர், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

காலம் நேரம் வேகம் நீங்கும்,
வாழ்வோர் மரித்தோரை சந்திக்க,
நீயும் நானும் சென்றேகிடுவோம்.
நம் படுக்கை நோக்கியே.

தந்தவரை நோக்கி வேகமாய்,
நம் ஆன்மாவும் அவரண்டை,
கிருபையாலே மீளும் நேரம்,
மீண்டோமா? நாம் இன்னாளில்.

இயேசுவே நீர் என் நேச மீட்பர்,
என் கர்த்தாவே என் ஆக்கியோன்.
கற்பியும் நீர் யாம் யார் என்று,
எங்கிருந்து வந்தோம் யாம்?

வாழ்வு சென்று சாவு அண்டும்,
காத்திடும் நீர் தோன்றும் வரை.
வாழ்ந்து நாங்கள் உம்மில் சாக,
நித்யமும் உம்மோடாள.

நேச மீட்பர் இயேசுவே நீர் தாம்,
நீச மாந்தர் கேட்டிட நீர்,
தூங்கி கனா காண்போரைநீர்,
நித்ய வாழ்வு தேடிட.

6.சென்றிடும் நிழல் போல் வாழ்வு
நீராவி போல் பறந்தே போம்,
பின் வாங்கிப்போகுமே காலம்,
மன்னித்தே நீர் போதியும்.

நம்மை நாமே ஞானி என்றெண்ணி,
பாவத்தோடு போராடியே,
வேலையிலும் தூங்கும் போதும்.
மகிமை காணும் வரை.

நியாயத்தீர்ப்பின் மகிமையிலே,
நாமும் நிற்க மரித்தோரோடு,
மீட்பரே நீர் எம்மை சேரும்,
உம்முடனே வாழ்ந்திட.