அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.@அப்போஸ்தலர் 2:2–3
உருவப்படம்
பேனி கிராஸ்பி
1820–1915

பேனி கிராஸ்பி, இரா டேவிட் சாங்கி மற்றும் ஜேம்ஸ் மெக்கிரஹனன். ஏறக்குறைய 1885 எண் 128 (Des­cend, O Flame of Sac­red Fire). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 18, 2019),

லோவான், விர்ஜில் காரிடன் டெய்லர் (1817–1891), கோரல் ஆன்தம்ஸ் (பாஸ்டன் மொசுசெட்ஸ் 1850) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

தீ ஜூவாலை போலே வந்திரங்கும்,
மா தூய நல் ஆவி யாம் கண்டிடவும்,
உண்மையன்போடு வாழ்ந்திடவே,
ஒவ்வொரு நாளும் நடத்தும்.

ஓசையாய் வீசும் காற்றைப்போலே,
உம் பிரசன்னம் இங்கும் நிரம்பிடவே,
எம் அவ்விஸ்வாசம் அகற்றியே,
உம் கிருபையால் எம்மை நிரப்பும்.

பிழம்பாய் விண்ணில் தோன்றி இங்கே,
தம் மைந்தனாம் கிறிஸ்துவாய் வந்திறங்கி,
அவர் தம் அன்பின் ஐஸ்வர்யத்தால்,
வந்தெங்கள் உள்ளம் ஒன்றாக்கும்.

ஆமேன்.