அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.@மத்தேயு 8:2
உருவப்படம்
பேனி கிராஸ்பி
1820–1915

பிரான்ஸிஸ் ஜேன் கிறாஸ்பி, 1877 (Faith in Je­sus). சௌ. ஜான் பாரதி (ஜூன் 22, 2020),

வில்லியம் ஹோவார்ட் டோனே (1832–1915) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

மா தயாள ஆண்டவா, உம் முகம் காட்டிடும்,
வியாதியோடன்று வந்தோர் போல்,
இன்று நான் வந்தேனே.
உம்மாலே கூடும் ஆண்டவா,
என் பாவம் போக்கிட,
நான் உடைந்தோனாய் வந்தேனே,
என்னையாட்கொள்ளுமே.

பல்லவி

என்னை சுத்தமாக்குமே,
என் ஆன்மா வாழவே,
உம்மையே பற்றி நான் விடேன்
என் விசுவாசத்தால்.

ஆண்டவா சுகமாக்குமே,
நான் கெஞ்சி நிற்கின்றேன்,
உம் பாதம் வீழ்ந்தேன் நான் இதோ,
என் வேண்டல் கேளுமே.
உம் மீதில் என் விஸ்வாசமே,
என்றுமே வீணாகா,
நான் நம்பினேன் என் ஆண்டவா,
என்னை சுத்தமாக்கும்.

பல்லவி

என்னை நீர் தூய்மையாக்குமே,
கெஞ்சுகின்றேன் உம்மை,
கேட்டேன் நான் உந்தன் வாக்கிதோ,
என் விசுவாசத்தால்,
என் உள்ளில் ஆனந்தம் இதோ,
என் கண்ணீர் தீர்ந்ததே,
ஆம் அன்பின் வார்த்தை கேட்கிறேன்,
போ பாவம் செய்யாதே.

பல்லவி