
அநாமதேய (Father, Bless Our School Today); சௌ. ஜான் பாரதி (2022).
பால்டிமோர், பேல்டிமோர் ஓய்வுநாள்பாடசாலை பாடல் புத்தகம் /தூய லூயிஸ் மிசோரி கன்கார்டியா வெளியீடு 1912 (🔊 pdf nwc).
ஆண்டவா எம் பள்ளியில்
சொல்லிலும் செயலிலும்,
பாடல் ஜெபமும் யாவிலும்,
உன்தன் ஆசீர் தாருமே.
அன்பு கொண்ட இயேசுவே,
உன்தன் சித்தமே செய்யவே,
இன்று எம்மை நீர் சந்தியும்,
நீரே கற்பித்து அருளுமே.
தூய ஆவி வல்லமை,
ஆசீர்வதித்தின்னாளையும்,
நாங்கள் உம் சித்தம் செய்யவே,
நீரே, தொட்டெம்மை வாழச்செய்யும்.