நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.@மத்தேயு 28:19–20
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ரெஜினால்டு ஹுபர், 1819 (From Green­land’s Icy Mount­ains). சௌ. ஜான் பாரதி (2018),

வெப், ஜார்ஜ் ஜேம்ஸ் வெப், 1830 (🔊 pdf nwc).

உருவப்படம்
ரெஜினால்டு ஹுபர்
1783–1826

1819ஆம் ஆண்டின் விட் சண்டே அன்று அறிவர் ஷிப்லே, வெரெக்ஸ்ஹாமின் விகாராகவும் தூய அசாப்பின் டீனாகவும், இருந்த சமயம் வெரெக்ஸ்ஹாமின் ஆலயத்தில் பிரசங்கிக்கும் பொழுது சுவிசேஷ பிரபல்ய குழுவிற்காக அனைத்து ஆலயங்களிலும் காணிக்கை சேகரிப்பதற்கான கடிதத்தை அனுப்பினார். மேலும் ஞாயிறு மாலை ஆராதனைகளில் ஒருசொற்பொழிவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஹுபர் அவர்கள் வெரெக்ஸ்ஹாம் ஆலயத்தில் முதற்சொற்பொழிவு செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தார். ஹீபர் அவர்களின் மாமனாரான அறிவர் ஷிப்லே ஹீபரை சனிக்கிழமை அன்று, “நாளையதினம் பாடுவதற்காக ஏதாவது எழுதுமாறு பணிக்க ஹீபர், அறிவர் ஷிப்லேவும் அவரது சில நண்பர்களும் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு சிறிது தள்ளி சென்றமர்ந்தார். சற்று நேரம் சென்றதும் ஹீபர் தான் எழுதியிருந்த மூன்று சரணங்களை படித்து காண்பித்ததும், ஆம் ஆம் மிக்க நன்று இது போதும் எனக்கூற, ஹுபர் இல்லை பொருள் இன்னும் முழுமை பெறவில்லை என்று சொல்லியும் அவர் பணியாததினால் ஹுபர் மிக தாழ்மையாய் கெஞ்சி கேட்டு இன்னும் ஒரு சரணம் இன்னும் ஒரு சரணம், எனகூறி இருபது நிமிடங்ளில் எழுதிமுடித்தார், இப்பாடல் அடுத்தநாள் காலையில் வெரெக்ஸ்ஹாமின் ஆலயத்தில் ஒரு பழைய நடன இசையான “ஓசையுடன் கடல் பொங்கிய சமயம்” ராகத்தில் பாடப்பட்டது. இப்பாடல் 1822 ஆம் ஆண்டு சுவிசேஷ பத்திரிக்கையிலும் 1923ல் கிறிஸ்துவ பார்வையாளரிலும் வெளியானது. இதன் நிஜப்பிரதி லிவர்பூலைச்சேர்ந்த அறிவர் ராபெல்ஸ் என்பவரிடம் வெகு காலம் இருந்தது அவர் இதை இதனை அச்சிட்ட கென்னடி என்னும் தன் நண்பரிடமிருந்து பெற்றிருக்கலாம், அவர் இறந்தப்பின் அது நாற்பது கினியாசுக்கு விற்கப்பட்டது. ஹுபர் அவர்கள் இரண்டாம் சரணத்தில் காட்டுமிராண்டி என்பதை மாற்றி புற ஜாதியார் என்று எழுதியுள்ளார்கள். இந்த நகல் தற்பொழுது ஜான் ரைலாணட்ஸ் நூலகத்திலுள்ளது…

பிஷப் ஹுபர் அவர்கள் 1823ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கடற்பிரயாணமாக வந்ததைபற்றி எழுதுகையில்—நாங்கள் தற்சமயம் இலங்கைக்கு வெகு தொலைவிலிருக்கிறதால் அந்நாட்டின் நறுமணங்களை உணரமுடியவில்லை, ஹாவ்தோர்ன் ஹெட்ஜ்ன் நறுமணத்தை மலாக்கவின் தண்ணீர்களை கடக்கும் பொழுது அனுபவித்திருக்கிறோம், இலங்கையிலிருந்தும் முப்பது நாற்பது மைல்களுக்கப்பாலிருந்தும் சில சமயங்களில் அனுபவித்திருக்கிறோம்—இக்குறிப்பை இப்பாடலின் இரண்டாம் சரணத்தில் காணமுடியும்.

டெல்போர்டுபக்கம்: 395–6

மிஷனெரி பாடல்களிலேயே மிக நேர்த்தியானதாக இப்பாடல் கருதப்படுகிறது பிஷப் ஹுபர் அவர்கள் இன்னும் அதிகமாக எழுத அனுமதிக்கப்பட்டிருந்தால் நமக்கு என்னவெல்லாம் கிடைத்திருக்குமென வியக்கவேண்டியிருக்கசெய்கிறது

கிரீன்லாந்தின் பனி மலை துவங்கி,
இந்திய பவள பாறை வரை,
ஆப்ரிக்க வெண் நீர் வீழ்ச்சி
விழுந்தோடும் மணல் மீது,
பல பழமையான நதிகளும்
பனை பாலைவனமும்,
தாம் தவறிய வழி சீராக்க,
நம்மை அழைக்குதே.

நல் நறுமணம் தவழ்ந்தே வீசுதே,
ஜாவாவின் கரையிருந்தே,
எல்லாம் நன்றாயிருக்க,
மக்கள் வாழ்வு விடிவின்றி,
வீண் தேவையற்ற வெகுமதி
பாழான வாழ்விலே,
கண்ணிருந்தும் காணாது,
கல், மரம் வணங்கியே.

நாம் பெற்ற ஞானம் ஆசீர்,
பரத்திலிருந்து, வைப்போமா
நாமே நமக்காய், அவர்க்காய்
பகிர்ந்தளிப்போம்,
இரட்சிப்பு நம் இரட்சிப்பு
நற்செய்தி இதுவன்றோ?
உலகின் கோடி தேசமும்,
நற்செய்தி சொல்வோமே.

மிதந்து நகர்ந்து செல் காற்றே
உருண்டோடும் நீரலையும்,
இரு துருவமும் தொடும்
கடலலைபோலே, அவர் நாமம்
சொல் எங்கும், நம் மீறுதலின்
விளைவாலே பலி ஆடாய்
மாண்டாரே, நம் கர்த்தர் மீட்பர்
ராஜா, வந்தாளுவார் என்றும்.