என் வாழ்வின் ஆண்டவர் நீர் தாமே,
வீழ்ந்தே உம் பாதமே அண்டினேன்,
வெள்ளம் போல் சூழ்ந்ததே சோதனை,
நடுங்கும் என்னை காத்திடும்.
நண்பர் இல்லார்க்கும் நண்பன் நீர்,
வேறெங்கே வேதனை கூறிடுவேன்,
உம் வாசல் திறந்தே தோன்றுதே,
திக்கற்றோர் ஏழைகள் வரவேற்க.
துக்கத்தில் உம்மிடம் புலம்பினோம்,
பக்கத்தில் வந்து நீர் பலம் தர,
உம் வாக்கு என்றென்றும் நிலையன்றோ?
வேண்டுவோர் வேண்டல் வீணாமோ?
நீர் தீர்க்கா துயரம் ஏதுமுண்டோ?
கேளாதொழிந்த ஜெபமுண்டோ?
ஜெபத்தைகேட்டு பதில் தந்து,
என் பாரம் யாவும் சுமந்தீரே.
எனக்கு நீர் மாத்ரம் போதுமே,
எனக்காய் வாதிடும் வல்லவர் நீர்,
உலகோடிசைந்தோர் அறியாரே,
என்னைப்போல் யார் உண்டவர்கட்கு.
மறந்தெரிந்த ஏழை நான்,
ஆனால் என் தேவன் நீர் மறவாமல்,
சேர்த்து காத்து வழி காட்டி,
வாக்கு தந்தீர் என் துணையானீர்.