
ஐசக் வாட்ஸ், 1719 (God of My Life, Look Gently Down). சௌ. ஜான் பாரதி (செப்டம்பர் 2, 2023),
இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

என் ஆண்டவா கண்ணிரங்குமே,
என் நோவு கண்டிடும்,
ஊமையானேன் நான் உம் முன்னே,
உம் சித்தம் மட்டும் செய்யவே.
வியாதியுள்ளோர் நாங்களே,
ஆம் நீர் அழைக்க வந்தோம் ,
தயங்காமல் உம் கண்டிப்பையே,
ஏற்றே யாம் முணகாமலே.
தாழ்மையாக கெஞ்சும்போது,
வன்மை இன்றி என்னை,
சக்தி தீர்ந்து என் ஆவி மாண்டு,
உம் தண்டனையால்தானே.
அந்து பூச்சிபோல் நசுங்கியே,
வீழ்ந்து தூசி போலே,
வீழ்ந்து எம்மாலே கூடாமல்,
எம் மாய அழகுமே.
மாண்டு மடியும் வாழ்விதில்,
நீர் மேல் குமிழிபோலே,
ஆதாமும் பின் சந்ததிகளும்,
மாய புகையல்லவா.
ஆம் நானும் ஓர் பிரயாணிதான்,
என் முன் சந்ததிபோல்,
நானும் செல்ல காத்திருந்தே,
கூப்பிடும் நேரத்தில்.
ஆனால் இன்னும் நான் வாழ்ந்திட,
என் சொற்ப நாட்களில்,
உம்மை துதிப்பதே பாக்யம்,
உம் அன்பை கூறியே.