எல்லையில்லா எம் ஆண்டவா,
வெறும் புழுக்கள் யாம்,
படைப்புக்கள் எல்லோருமாய்
உம்மை போற்றுகின்றோம்.
உம் சிம்மாசனம் நின்றதே,
விண்மீன்கள் தோன்றுமுன்,
என்றும் வாழ்வீர் நீர் ஆண்டவா
எல்லோரும் மாண்டாலும்.
உம் முன்னே யாவும் மாயையே,
மகா மகத்துவம் நீர்,
பிரபஞ்சம் உருவாகும் முன்
தீ மாய்க்கும் நாள்வரை.
முன் பின்னான எக்காலமும்,
உம் கண்கள் முன்பன்றோ?
ஏதும் நீர் காணா காட்சியோ?
புதிதேதுமுண்டோ?
திகிலாம் எங்கள் வாழ்விலே,
சோர்ந்தே அயர்ந்தோமே,
உம் ஞானம் காலம் கடந்தே,
நகர்ந்தே செல்லுதே.
எல்லையில்லா எம் ஆண்டவா,
வெறும் புழுக்கள் யாம்,
படைப்புக்கள் எல்லோருமாய்
உம்மை போற்றுகின்றோம்.