பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.@வெளி 5:11
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

தாமஸ் கெல்லி, ஹிம்ஸ் இரண்டாம் பதிப்பு 1806 (Hark, Ten Thou­sand Harps and Voic­es). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 9, 2019),

ஹார்வெல், லோவல் மேசன், 1840 (🔊 pdf nwc).

உருவப்படம்
லோவெல் மேசன்
1792–1872

ஆயிரம் எக்காளத்தோடும்,
ஆர்ப்பரிப்போம் ஆனந்தம்,
இராஜன் இயேசு ஆட்சி செய்ய
வானலோகம் மகிழ,
அன்பின் இயேசுவின் நல் ஆட்சி
வீற்றாரே, தம் சிம்மாசனம்,
தானே பூமி ஆள்கிறாரே,
அல்லேலூயா பாடுவோம்.

தூதர் தோன்றி பிரகாசமாய்
தெய்வ ஆட்டை போற்றியே,
பூவில் வெற்றி வீரனாக,
திவ்ய நாமம் சூடியே,
தூதர் வாழ்த்தி போற்றி பாட
விண்ணில் மற்றோர் பாடல் ஏது?
அல்லேலூயா அல்லேலூயா,
அல்லேலூயா பாடுவோம்.

தூயோர் வாரும் கூடி பாட
தூதரோடு சேர்ந்தென்றும்.
நம்மையும் அவர் அழைப்பார்,
தாம் சென்ற அவ்விடமே,
பாடி போற்ற ஏற்றதன்றோ?
மகிமை கனம் என்றும்,
அல்லேலூயா அல்லேலூயா,
இராஜாதி இராஜனே.

விண்ணின் தேவன் மண்ணில் வந்து
சிலுவை சுமந்துமே,
எல்லா வல்லமையும் கொண்டே,
இன்றும் என்றும் ஆள்கிறார்,
நாமும் பாடி போற்ற இன்பம்,
இன்றும் என்றும் சதாகாலம்,
அல்லேலூயா அல்லேலூயா,
பாடி போற்ற இன்பமே.

வாழ்க இயேசு சுவாமி என்றும்,
மகிமை ஒளி நீர்தாம்,
வாழ்வின் இராஜன் உம் பிரகாசம்,
ஆனந்தமாய் மகிழ்வோம்,
உந்தன் பிள்ளை யாம் எல்லோரும்,
அன்பின் இன்ப ஊற்று நீரே,
அல்லேலூயா அல்லேலூயா,
உந்தனன்பெம் சொந்தமே.

இராஜரான் என்றும் ஆள்வீர்,
ஜீவ கிரீடம் உமதே,
ஒன்றும் உந்தன் அன்பினின்று
நீக்கிடாது என்றுமே,
எம்மை நேசித்தே நீர் என்றும்,
இன்ப வெற்றி பிள்ளைகள் யாம்,
அல்லேலூயா அல்லேலூயா
காண் போம் உந்தன் முகமே.

மீட்பரே நீர் வேகம் வாரும்,
தாருமே மகிமை நாள்,
கேட்குமே அழைக்கும் சப்தம்,
வானும் மண்ணும் மறைந்திடும்,
நாமும் தங்க யாழிசைத்தே,
பாடி போற்றி ஏற்றி வாழ்த்தி,
அல்லேலூயா அல்லேலூயா,
மகிமை இராஜனுக்கே.