ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.@எபேசியர் 2:10
portrait
வில் எல். தாம்ப்சன்
1847–1909

வில் எல். தாம்ப்சன், 1904 (Have I Done Any Good?) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 15, 2022),

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

இன்று ஏதேனும் நன்மை நான் செய்தேனா?
யாருக்கேனும் உதவினேனா?
யாரையேனும் நான் தேற்றிமகிழ்வித்தானா?
இல்லை என்றால் வீணன் நான்,
யார் சுமையாயினும் ஆம் லேசானதா?
நான் செய்ய முன் வந்ததினால்,
நோயுற்றோர்க்கும் ஆம் சேர்ந்தோர்க்கும் உதவினேனா?
அங்கே நான் இருந்தேனா?

பல்லவி

எழுந்தே நீ ஏதேனும் செய்,
கனா நீ காண்பதெல்லாம் வீண்,
நன்மை செய்வது நன்று, ஆ ஆனந்தம் ஆனந்தம்,
ஆசீராம் சேவை அன்பும்.

இங்கு செய்யத்தக் கப்பல சேவைகள்
பல சந்தர்ப்பங்கள், உண்டே,
அதை செய்யாமலே தள்ளிவிட்டிடாமல்,
போய் இன்றேதேனும் செய்வாய்,
நாம் கொடுப்பதுவும் ஆம் நன்மையன்றோ?
அன்பாலே நாம் செய்வதினால்,
சேவை செய்வோர்தான் வாழத்தகுந்தோரன்றோ?
சோம்பினோர்க்கு இடமில்லை.

பல்லவி