என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.@எபிரெயர் 2:9
உருவப்படம்
தாமஸ் கெல்லி
1769–1855

தாமஸ் கெல்லி, 1820 ஹிம்ஸ் ஆன் வேரியஸ் பேஜஸ் ஆப் ஸ்கிரிப்சர்ஸ் 5 ஆம் பதிப்பு டுப்லின் 1820 (The Head That Once Was Crowned). சௌ. ஜான் பாரதி (மார்ச் 12, 2019),

அமேசிங் கிரேஸ், விர்ஜினியா ஹார்மனி, 1831 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

முள் கிரீடம் பூண்ட சிரசே,
இந்நாள் மகிமையால்,
பொற்கிரீடம் ஏற்று தோன்றுதே
நம் மீட்பர் சிரமே.

மா உன்னத விண் ஸ்தலமே,
நம் மீட்பரால் அன்றோ?
கர்த்தாதி கர்த்தர் இராஜனாம்,
விண்ணின் பிரகாசமே.

விண் வீட் டில் வாழ்வோரானந்தம்,
இப்பாரில் காணாதே,
அவர்தம் அன்பை பெற்றோர்க்கு,
தம் ஆசீர் ஈகுவார்.

ஈன சிலுவை என்போர்க்கு,
தம் கிருபை ஈகிறார்,
அவரின் நாமம் என்றென்றும்,
விண்ணின் பேரானந்தம்.

இப்பூவின் பாடனுபவம்,
வான் வீட்டில் ஆள்வாரே,
தம் பாக்யம் ஆசீர் யாவுமே,
நம் மீட்பர் அன்பாலே.

நம் ஆண்டவர் சிலுவையே,
நம் வாழ்வும் ஆரோக்யம்,
மா ஈன சிலுவை அவர்க்கது,
மெய் வாழ்வு நமக்கு.