மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?@1 கொரிந்தியர் 15:55
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வில்லியம் கி. மார்டீன், 1914 (He Arose). சௌ. ஜான் பாரதி (ஜூன் 16, 2023),

ஜே. எம். கோப்லேன்ட் (🔊 pdf nwc).

உருவப்படம்
வில்லியம் கி. மார்டீன்
(1864–1914)

இயேசு ராஜா விழித்தெழுந்தார் அன்று,
எழுந்தார், எழுந்தார்,
வெற்றி வீரர் அன்று நம்மை மீட்கவே,
எழுந்தார், எழுந்தார்,

எழுந்தார், கல்லரையினின்றே, நம்மையே மீட்க
சாவின் கூர் ஓடித்து மீட்கவே, எழுந்தார் எழுந்தார்.

தூதர் அங்கே வந்து நின்றே கண்டனர்,
எழுந்தார், எழுந்தார்,
மரித்தோரின் வஸ்தரம் அங்கே இருக்க,
எழுந்தார், எழுந்தார்,

சாவின் கூர் ஒடித்தே பயம் நீக்கினார்,
எழுந்தார் எழுந்தார்,
இருள் சூழ்ந்தே இருந்தாலும் பாடலாம்,
எழுந்தார், எழுந்தார்,

ஆள்கிறாரே இன்றும் இராஜ இராஜனாய்,
எழுந்தார், எழுந்தார்,
அவர் தயவாலே நானும் எழுவேன்,
எழுந்தார், எழுந்தார்,