
ஜான் நீயூட்டன், ஓல்னே ஹிம்ஸ் லண்டன், 1779 (Hungry, and Faint, and Poor). சௌ. ஜான் பாரதி (ஜூலை 7, 2020),
இராகம் பிராங்கோனியா, யோஹான் பல்தாசர் கோனிக், 1738 (🔊 pdf nwc).

பசியால் சோர்ந்தோராய்,
வந்தோம் எமைப்பாரும்,
கூடினோம் உம் கிருபாசனம்
ஆசீர் யாம் பெற்றிட.
உம் வார்த்தையே அல்லால்,
பசியால் சாவோமே,
பணம் எம்மிடம் இல்லையே,
யாம் தூயோர் அல்லவே.
எம் ஆன்ம தேவைக்கே,
உம் கரம் தருமே,
கேளும் எம் வேண்டல் இப்போதே,
யாம் உண்டு வாழ்ந்திட. ஆமேன்.