துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.@எபிரெயர் 10:22
உருவப்படம்
பேனி கிராஸ்பி
1820–1915

பேனி கிராஸ்பி, பிரைடஸ்ட் & பெஸ்ட், ஹோவார்ட் டோனே, மற்றும் ராபர்ட் லோரி (சிக்காகோ, இல்லிநாய்ஸ், பிக்லோ & மெய்ன் 1875) எண் 22 (I Am Thine, O Lord). சௌ. ஜான் பாரதி (2018),

ஹோவார்ட் டோனே (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

திரு.வில்லியம் ஹோவார்ட் டோனே, அவர்களை ஒஹியோவிலுள்ள சின்சினாட்டியில் அவரது இல்லத்திற்கு சந்திக்க சென்றிருந்த சகோதரி பேனி, சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்த நேரம், இருவரும் கடவுளின் நெருக்கத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தனர், மாலை வேளையின் இருள்சூழ்ந்துகொண்டிருந்தது இவர் எழுதிய பாடல்களிலேயே மிகவும் பயனுள்ளதாகிவிட்ட இப்பாடலின் கருத்து பேனி அவர்களின் மனதில் உருவெடுத்து அவர் அன்றிரவு தூங்கச்செல்லுமுன் முழுவதையும் எழுதிவிட்டிருந்தார்கள். இப்பாடலுக்கான திரு.டோனே அவர்களின் இசையும் மிக பொருத்தமானதாக அமைந்து நற்செய்தி பாடல்களிலேயே மிகவும் விரும்பப்பட்டும், விசேஷமும் பிரபலமுமான பாடலாகவும் விளங்குகிறது.

சாங்கி: பக்கம் -325

உந்தன் பிள்ளை நான்
குரல் கேட்டேனே,
உமதன்பை சொன்னதே,
நானோ இன்னுமே விசுவாசித்தே,
நெருங்கி உம் அருகே,

பல்லவி

இயேசுவே நீர் என்னை சேர்த்திடும்,
உம் சிலுவையண்டைக்கே,
இயேசுவே நீர் மாண்ட சிலுவையண்டை,
என்னை நீரே, சேர்த்திடும்.

உந்தன் சேவைக்கே
ஆசீர் தாருமே,
உம் கிருபையின் வல்லமையால்,
எந்தன் ஆன்மமே உம்மை நோக்கியே,
என் சுயம் நான் வெறுத்தே,

பல்லவி

ஒவ்வோர் வேளையும்
மெய் மகிழ்ச்சியாய்,
சம்பாஷித்தும்மோடு,
முழங்கால்களில் நின்று ஜெபிக்க,
நீர் என் அன்பர் நண்பரே,

பல்லவி

அன்பின் ஆழமே
இன்னும் அறியேன்,
வாழ்வின் கடல் கடந்தும்,
எட்டா ஆனந்தம் கிட்டாதொழிந்தும்,
உம்மில் நானிளைப்பாற.

பல்லவி