சாமுவேல் மெட்லி, 1775 (I Know That My Redeemer Lives). தமிழாக்கம் சௌ. ஜான்-பாரதி (ஏப்ரல் 23, 2019),
டியூக் ஸ்டிரீட், 1793 ஜான் ஹட்டன் அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது (🔊 pdf nwc).
என் மீட்பர் வாழ்கிறார் நான் அறிவேன்,
இந்த நற்செய்தி இன்பமே,
அன்று மரித்தின்றும் வாழ்கிறார்,
என் சிரமாம் என் ஆண்டவர்.
வாழ்கிறார் தம் அன்பால் அணைத்திடவே,
வாழ்கிறார் எனக்காய் வழக்காட,
என் ஆன்ம வாஞ்சை தீர்த்திடவே,
என் தேவை தேடி வந்திடுவார்.
சாவினின்று ஜெயித்தெழுந்தாரே,
என்றென்றும் வாழ்ந்து மீட்டிடவே,
விண்ணில் மகிமையாய் வாழ்கிறாரே,
வெற்றி பெற்றே வான் வீட்டிலே,
வாழ்கிறார் வாழ்வளித்திடவே,
என்னை நல் வழியில் நடத்திடவே,
நான் விழும்போதென்னைத்தூக்கிடவே
என் ஆன்ம வாஞ்சை தீர்த்திடவே.
என் காயம் போக்கிட வாழ்கின்றார்,
என் கண்ணீர் யாவும் துடைப்பார்,
என் உள்ளம் சாந்தமும் அமைதியுடன்,
வாழவும் ஆசீர் தந்திடவும்.
வாழ்கிறார் என் ஞான நண்பனே,
நேசித்தென்னை வாழ்நாள் வரையில்,
ஆனந்தித்தே நான் பாடிடவே,
தீர்க்கரும் ஆசான் இராஜனும்.
என் ஸ்வாசம் தந்திட வாழ்கின்றார்,
சாவை நானும் வென்று எழுந்திடவே,
விண் ஸ்தலம் எனக்காய் ஆயத்தமே,
அங்கென்னை சேர்ப்பார் பத்திரமாய்.
அவர் நாமம் என்றென்றும் வாழ்கவே,
நேற்றுமின்றும் என்றும் மாறிடாரே,
ஆ என்ன இன்பம் இந்நம்பிக்கை,
இன்றும் வாழ்கிறார் அறிவேன்.