பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.@சங்கீதம் 98:4
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஹென்றி ஜே. வான் டைக், 1907 (Joy­ful, Joy­ful, We Adore Thee). சௌ. ஜான் பாரதி (2018),

ஹிம் டு ஜாய், லுட்விக் வான் பித்தோவன், 1824 (Ode an die Freude) (🔊 pdf nwc).

உருவப்படம்
ஹென்றி ஜே. வான் டைக்
1852–1933

1992 ஆம் ஆண்டு நான் கொரியாவிலுள்ள சியோல் நகருக்கு, பிலிபின்ஸ் நாட்டிலிருந்து “நீதி அமைதி படைப்பின் ஒற்றுமை” எனும் உலக திருச்சபைகளின் கூட்டமைப்புக் கூட்டத்திற்கு, இசைக்கறுவிகள் இசைக்க தைவானிலிருந்து அறிவர் இடோலோ, மற்றும் அமரிக்காவிலிருந்து அறிவர் டெரி மெகார்த்தருடனும் அழைக்கப்பட்டு தினமும் நடைபெறும் காலை வழிபாட்டில் சித்தார், கிட்டார், மற்றும் தாய்லாந்தின் பின் எனப்படும் இசைக்கறுவிகள் வாசிக்க அழைக்கப்பட்டிருந்தேன். ஒருவாரம் அங்கிருந்ததால் அந்த கூடத்தின் காப்பாளருடன், பேசிக்கொண்டிருந்த சமயம் அவர், ஏன் உங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு ‘Joy­ful Joy­ful’ பாடல் தெரியவில்லை? என்று கேட்க, பதிலாக நான் அது கிறிஸ்தவ பாடல் அதனால்தானிருக்மென்று சொல்லிவிட்டேன். நம் நாட்டிற்கு திரும்பி சென்று பள்ளிகளில் கற்பிக்க நேர்ந்தால் கண்டிப்பாக இதை கற்றுத்தர வேண்டுமென முடிவெடுத்தேன். எனக்கு அப்போது 32 வயது, மூன்று ஆண்டுகள் சென்றபின் நான் சென்னையிலுள்ள ஒரு பிராம்ணர் நடத்தும் பள்ளியில் இப்பாடலை கற்றுத்தந்து, அதை பிள்ளைகள் பாடியதும், ஓரிரு மாணவிகளும் பக்கத்து அறையிலிருந்த ஒரு ஆசிரியையும், இப்பாடலை நாங்கள் ஒலிம்பிக் போட்டி நிகழ்சியில் டிவியில் பார்த்து கேட்டோம் என்றனர்.

சௌ. ஜான் பாரதி, 2018

ஆனந்தமாய் ஸ்தோத்தரிப்போம்,
வல்ல அன்பின் ஆண்டவா,
மலர் போலே எங்கள் மனம்
உம் முன்னே மலர்ந்ததே,
எங்கள் துக்கம் பாவமகற்றும்,
அவிசுவாசம் நீக்குமே,
நித்யானந்தம் தருவீரே
மெய் ஒளியால் நிரப்பும்.

மகிழ்சியாய் உம்மை சூழ்ந்தே
மண்ணும் விண்ணும் வாழ்த்துதே,
போற்றும் வானோர் விண்மீன் கூட்டம்
துதிகளில் உம் வாசம்,
வயல்வெளி காடு மலைகள்
பள்ளத்தாக்கு கடலலையும்
பூவும் குயிலும் பாயும் நீர்வீழ்ச்சி
அழைக்கிறதானந்திக்க.

நீரே எல்லாம் தந்து மன்னித்தீர்
ஆசீர்வாதம் ஆசி நீர்,
ஜீவ ஊற்றும் வாழ்வின் இன்பம்
ஆழ்கடல் மகிழ் ஓய்வும்,
நீரே தந்தை சகோதரர்
அன்பில் வாழும் எல்லாமே,
அனைவரையும் யாம் நேசிக்க
நித்தய மகிழ்சியில் சேர்த்திடும்.

மாந்தரே நாம் கூடிஅர்ப்பரிப்போம்
விண்மீன் பாடல் தொடர்ந்திட,
எங்கள் தந்தை உந்தன் அன்பு
ஒன்றாய் எம்மை இணைக்குமே,
பாடி போற்றி முன் செல்வோமே
வெற்றி தாரும் குழப்பத்திலே,
ஆனந்த தொனிதான்
உம்மிடம் நடத்தும்
வாழ்வின் வெற்றி பாடலே.