பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.@யாத்திராகமம் 15:27
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஜேன் பாக்ஸ் குரூட்சன், எ லிட்டில் ஒய்ல் அண்டு அதர் போயம்ஸ் (மேன்செஸ்ட்டர், இங்கிலாந்து 1864) (Joy in Sor­row). சௌ. ஜான் பாரதி (மே 8, 2019),

குரூவ்ட்சன், இரா டேவிட் சாங்கி (🔊 pdf nwc).

உருவப்படம்
இரா சாங்கி
1840–1908

நான் கண்டேன் எந்தன் துன்பத்தில்,இரகஸ்ய தைலமே,
ஓர் இன்ப காலை நாளை, ஆம் அன்பின் மழையைப்போல்,
ஒளஷதம் கண்டேனே நான், என் துன்பத்தில் விமோச்சனம்,
மெல்லோசை வாக்குமாமே, மெல்லோசை வாக்கிதே,
உடைந்து நொந்த யாவர்க்கும் மெல்லோசை வாக்கிதே.

நான் கேட்டேன் இன்ப ஓசன்னா, என் ஒவ்வோர் புலம்பலும்,
இன் மன்னா பெற்றேன் நானும், எஸ்கோலில் இல்லாததே,
ஆம் காய்ந்த துரவண்டை நான், கண்டேனே ஏலிம் இதே,
ஆம் காய்ந்த ஊற்றண்டையில், நான் கண்டேன் ஓர் ஏலிம்,
நான் சோர்ந்து நொந்த நேரம் ஆம் கண்டேன் இதோ ஏலிம்.

நான் ஏலிம் ஊற்றும் சோலை காற்றும் சோர்ந்த நேரம் கண்டேன்,
நான் கண்ணீர் சிந்தி சாய்ந்தேன், ஆம் வானவில்லுமே,
என் அருகில் ஆனாலும் தூரம், ஆம் மகிமை விந்தையுமே,
நான் சோர்ந்த நேரம் கண்டேன்,ஆ மகிமையாமே,
ஆம் மகிமையும் விந்தையே, ஆம் வான வில்லைப்போல்.

என் மீட்பரே நான் உம்மோடு, என் ஆனந்தமும் நீரே,
என் அன்பின் ஒளஷதம் நீர், பயந்தோர்க்காறுதல்,
வீழ்ந்தோர்க்கு தேற்றுதல் நீர், பயந்தோர்க்கு தாபரம்,
நீர் வானவில்லுமாமே, நீர் வானவில்லைப்போல்,
கண்ணீர் விடும் உம் பிள்கைக்கு, தூயோர்க்கு மகிமை.