பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.@சங்கீதம் 98:4
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1719 (Joy to the World). சௌ. ஜான் பாரதி (2004),

அந்தியோகியா, ஜார்ஜ் எஃப். ஹாண்டெல் (1685–1759) இப்பாடலுக்கேற்ப ஒழுங்கு படுத்தியவர் லோவல் மேசன், 1836 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வருடா வருடம் கிறிஸ்துமஸ் நெருங்கும் போது சென்னை வெப்பேரியிலுள்ள தூய பவுல் ஆலயத்திலிருந்து அங்கு நடைபெறும் பாடகற்குழு ஞாயிறு ஆராதனைக்காக பயிற்சித்தர அழைப்பார்கள், 2004 ஆம் ஆண்டு பாடகர் குழுவிலிருந்த ஒரு வயது முதிர்ந்த சகோதரி Joy to the World பாடலின் தமிழாக்கம் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு நான், இல்லை என்று சொன்னதும் அவர்கள் நீங்கள் எழுதலாமே என்றார்கள், நான் முயற்சி செய்கிறேன் என்று சொல்லியும் அன்றோடு அதை மறந்துவிட்டேன், மீண்டும் அடுத்த பாடல் பயிற்சிக்கு நான் ஒரு முச்சக்கர வாடகை வண்டியில் அமர்ந்ததும் என் மனதில் தோன்றிய உணர்வு, தமிழாக்கம் செய்ய வேண்டியது ஞாபகம் வரவே, எனது பெட்டியிலிருந்த ஒரு பழைய திருமண அழைப்பிதழின் பின்புறம் எழுத ஆரம்பித்து அலுங்கி குலுங்கி சென்ற அந்த பிரயாணத்தின் இருபது நிமிடங்களுக்குள் நான்கு சரணங்களையும் முடிக்கும்படி ஆண்டவர் எனக்கு இந்த வார்த்தைகளை தந்தார், அந்த கையெழுத்து ஆண்டவராலும் என்னாலும் மட்டுமே புரிந்துகொள்ளும்படி இருந்தது, வெகுநாள் வைத்திருந்தேன். அந்த வருட பாடல் ஆராதனையில் அவர்கள் இந்த பாடலையும் (பேரின்பமே பிறந்தாரே) பாடும்படி கடவுள் கிருபையளித்தார். மேலும் இப்பாடலை “பூமியிலே சமாதானம்” நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு ஆண்டும் பாடுகிறோம்.

சௌ. ஜான் பாரதி, 2018

பேரின்பமே, பிறந்தாரே,
மண்மீதில் ராஜனாம்,
ஒவ்வோர் உள்ளமும்,
ஒர் இடம் தரட்டும்,
விண் மண்ணும் பாடட்டும்
விண் மண்ணும் பாடட்டும்
விண் மண்ணும் விண் மண்ணும்
விண்ணும் பாடட்டும்.

பேரின்பமே, மீட்பர் ராஜன்.
மண்ணோர் பண்பாடட்டும்,
வயல் வெளி நீரோட்டமும்
கன்மலைகளும் பாடுமே,
என்றும் மகிழ்ச்சியாய்,
என்றும் மகிழ்ச்சியாய்,
இன்றும் என்றும் இன்றும் என்றும்
மகிழ்ச்சியாய்.

பாவத்துன்பம் இனி போமே,
பூமியில் வளமை,
தம் கிருபையை தந்திட,
இறங்கியே வந்தாரே,
பாவ சாபம் நீக்க,
பாவ சாபம் நீக்க,
பவசாபம் பாவம் சாபம், நீக்கவே.

பூமியின்மேல், மெய்சாந்தமே,
எல்லோரும் அறிவார்,
அவர் நீதியின் நேர்மையை,
மெய் அன்பின் மா அதிசயம்,
அவர் அன்பின் மாட்சிமை
அவர் அன்பின் மாட்சிமை
அவர் அன்பின் அவர்
அன்பின் மாட்சிமை.