அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்.@உபாகமம் 33:27
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

எலிஷா அல்பிரைட் ஹாப்மேன், 1887 தி கிலாட் இவாஞ்சல் பார் ரிவைவல் கேம்ப், மற்றும் சுவிசேஷ கூட்டங்கள் டால்டன் ஜார்ஜியா அந்தோணி ஜான்சன் ஷோவால்டர் மற்றும் கம்பெனி 1887 இப்பாடல் 1943 ஆம் ஆண்டு மிக்கி ரூநே நடித்த தி ஹியூமன் காமிடி என்னும் திறைப்படத்தில் பாடப்பட்டது (Lean­ing on the Ev­er­last­ing Arms). இவ்வார்த்தைகள் மாசசூசெட்ஸிலுள்ள பாஸ்டனில் பெனேயுல் ஹால் கொண்டாட்டத்திற்காக எழுதப்பட்டு, ஜூலை 4ஆம் நாள் 1842ல் அந்நகரத்திலிருந்த ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகளால் பாடப்பட்டது. சௌ. ஜான் பாரதி (2019),

அந்தோணி ஜான்சன் ஷோவால்டர், 1848 (🔊 pdf nwc).

உருவப்படம்
அந்தோணி ஷோவால்டர்
1858–1924

ஆம் நல் ஐக்கியம் இன்ப தெய்வீகம்,
நித்ய நாதரின் நல் தோள் மீது,
என்ன ஆசீராம் இன்ப சாந்தமாம்,
எம்மோசமும் அண்டா மார்பினில்.

பல்லவி

சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டாதங்கே,
சார்ந்து சாய்ந்து எம்மோசமும் அண்டா மார்பிலே.

என்ன இன்பமே இம் மெய் பிரயாணம்
நித்ய நாதரின் நல் தோள் மீது,
ஆம் நல் பிரகாசம் நாட்கள் சென்றிட,
எம்மோசமும் அண்டா மார்பினில்.

எந்த ஆபத்தோ பயம் இல்லையே,
நித்ய நாதரின் நல் தோள் மீது,
மெய் சமாதானம் அவர் என்னுடன்,
எம்மோசமும் அண்டா மார்பினில்.