🡅 🡇 🞮

ஒவ்வொரு உள்ளமும் ஆனந்தமாய் பாடட்டும்

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1
உருவப்படம்
ஹென்றி ஸ்டெவன்சன் வாஷ்பர்ண்
1813–1903

ஹென்றி ஸ்டெவன்சன் வாஷ்பர்ண், 1842 (Let Ev­ery Heart Re­joice and Sing). இவ்வார்த்தைகள் மாசசூசெட்ஸிலுள்ள பாஸ்டனில் பெனேயுல் ஹால் கொண்டாட்டத்திற்காக எழுதப்பட்டு, ஜூலை 4ஆம் நாள் 1842ல் அந்நகரத்திலிருந்த ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகளால் பாடப்பட்டது. சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (2018), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஜேம்ஸ் வெப், 1848 (🔊 ).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஒவ்வொரு உள்ளமும்
ஆ ஆனந்த பாடல் பாடி,
சிறாறும் பெரியோரும் சேர்ந்து
ஸ்தோத்ர பலியாகவே,

பல்லவி

அவர் நல்லவர் மிக இரக்கமும்
உருக்கமும் கொண்டவர்,
ஆ நாமும் பாடி போற்றுவோம்,
நம் எஹோவா அவர்,
மலைகளும் பள்ளத்தாக்குமே,
அவர் புகழ் பாடி போற்றி மகிழும்.
அவை எல்லாம் போற்றி பாடி
ஒன்றாய் துதித்திடும்
முன்னோரின் தெய்வமே,
அவர் நாமம் தொழுதிடுவோம்

வானமும் பூமியும்
அவர் வல்லமை சொல்லும்,
சூரியனும் சந்திரனும்,
அவர் வார்த்தை கேட்குமே.

பல்லவி