🡅 🡇 🞮

ஓர் தாய் தேற்றுவதுபோல

ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன்! நீங்கள் எருசலேமில் ஆறுதல் செய்யப்படுவீர்கள். ஏசாயா 66:13
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வில்லியம் ரன்யான் (Like as a Mo­ther Com­fort­eth). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (மே 9, 2020), பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 ).

உருவப்படம்
வில்லியம் ரன்யான்
1870–1957

ஓர் தாய் தன் பிள்ளையை அன்பாக,
தேற்றும் அவ்வண்ணமே,
என்னையும் தேற்ற கனிவாய்,
நீரே வாக்களித்தீர்.

தயவாய் நேர்த்தியாகவே,
தூங்காமல் உறங்காமல்,
உம்மையே நம்பும் பிள்ளையை,
காக்கின்றீர் என்றுமே.

தாய்போல் எப்போதும் தூங்காமல்,
அன்பான பிள்ளையை,
குற்றம் குறைகள் காணாமல்,
யார் கூருவார் இவ்விந்தை.

தாய்போலே நீரும் தாருமே,
இவ்வாரே அன்பாக,
மா தூய கிருபை கூறவே,
உம் அன்பின் ஈவுமே.