🡅 🡇 🞮

இரட்சிக்க வல்லவர்

நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே. ஏசாயா: 63:1
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஹெச். டி. ஜூலே முந்தய 19-ஆம் நூற்றாண்டு (Migh­ty to Save). சௌ. ஜான் பாரதி அவர்களால் ஆங்கிலம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (ஆகஸ்ட் 21, 2022, பொதுமக்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஜே. ஹெச். மெரிடித், பிந்தய 19-ஆம் நூற்றாண்டு (🔊 ).

நீர் வாழ்க வாழ்கவே, மீட்க வல்லோர்,
இப்பாரில் நடந்தீர், வல்லவரே,
யாம் போற்ற வந்தோமே,
உம் ஆசீர் பெற்றதால் ஆம் பாடி போற்றுவோம்,

பல்லவி

நீர் வல்லவரே, இரட்சிக்க வல்லவரே,
நீர் வல்லவரே, ஆம் பாடி போற்றுவோம்
நீர் வல்லவரே.

நீர் வென்றவரல்லோ, மீட்க வல்லோர்,
உம் நாமம் போற்றுவோம்,
வல்லவரே, மண்மீது தோன்றியே,
பாவம் மரணமும் வென்றே இரட்சித்திட,

பல்லவி

உம் கிருபை பெரிதே, மீட்க வல்லோர்,
உம் முகம் நோக்குவோம்,
வல்லவரே, எம் பாவம் போக்கயே,
நல் தூய்மை தந்தீரே, விண் கிரீடம் பெற்றிட,

பல்லவி