ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.@பிரசங்கி 12:14

ஜான் நீட்ஹாம், 1768 (Mor­tals, Give Ear). சௌ. ஜான் பாரதி, மே 30, 2020.

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

மாண்டிடும் மாந்தரே கேளும்,
முடிவு வந்திதோ,
காலம் விரைந்தே செல்லுதே,
குற்றமுள்ளோர் திகைக்க.

இருளிலும் காணும் கண்கள்,
இரகஸ்யம் தெளிவாய்,
மெல்லியதாம் சம்பாஷணை,
வெளிச்சமாய் எல்லாம்.

குற்றம் செய்தோர் நடுங்கியே,
பாவம் வெளிப்பட,
உள் யோசனை எண்ணங்களும்,
மறைவாய் வைத்துமே.

துக்கம் திகிலும் அண்டுமே,
மறைத்து வைத்தாலே,
வேதனை நெஞ்சை கொல்லுமே,
விஸ்வாசம் சாகவே.

அச்சுறுத்தார் தீயோரையும்,
நீதி அற்றோரையும்,
நீதிபரர் அன்பாகவே,
உண்மை நன்மை காண்பார்.

நாணுவார் வாழ்வில் நீதி செய்தோர்,
தம்கிரியை வெளிப்பட,
தன் பெயர் கண்டே ஆவலாய்,
தம் குற்றம் மறவாமல்.

இரவில் மறையும் சூரியன்,
பூமியின் நிழலாலே,
மீண்டும் தன் காந்தம் வீசியே,
பிரமாண்டமாய் காலையில். ஆமேன்.