அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.@ரோமர் 8:33
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கிரேஸ் வெ. ஹின்ஸ்டேல், 1865 (My Soul Com­plete in Je­sus Stands). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 20, 2020),

இராகம் டியூக் ஸ்டிரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
கிரேஸ் வெ. ஹின்ஸ்டேல்
1833–1902

என் உள்ளம் கிறிஸ்துவில் நின்றதே,
அஞ்சாமல் எந்த சட்டத்திற்கும்,
அவர் புன்னகை மா இன்பமே,
பாவம் குற்றம் விட்டோடவே.

கிறிஸ்தென்னில் வாழ சாந்தமாய்,
மன்னிப்பை பெற்றமைதியாய்,
அவர் மரணத்தால் பெற்ற கிருபையே,
துன்பத்துயரம் எனக்காக,

எவ்விரோதியும் அண்டாமல்,
அவரே நியாயம் செய்திடவே,
பாவி என்றே மீட்க்கப்பட்டோரை,
யார் கூறுவார் அவர்க்கெதிரே.

என் உள்ளம் பாடி துதித்திடுதே,
என்றும் ஆளும் இராஜனுக்காய்,
பாதம் வீழ்ந்தே தாழ்மையாய்,
நிற்கும் என்தன் உள்ளம் என்றுமே.