அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை.@சங்கீதம் 62:2
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1719 (My Spir­it Looks to God Alone). சௌ. ஜான் பாரதி (ஜூன் 1, 2020),

இராகம் டியூக் ஸ்டிரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

என் கோட்டையாம் கன்மலை நோக்கி,
என் ஆன்மா நம்பி ஏக்கமாய்,
திகிலும் பயமும் எனை சூழ,
இரட்சிப்பிற்காய் காத்து நிற்க.

தூயோரும் நம்பி அவரையே,
உள்ளத்தை ஊற்றி காத்திருந்தே,
ஒத்தாசையில்லா பகை சூழ,
ஆண்டவரே எல்லாம் நமக்கே.

உலகின் மேலோர் பொய்யரன்றோ?
வீணன்றோ அவரை நம்புதலே,
சீர்தூக்கி பார்ப்பின் சரி சமமே,
பறந்திடும் காற்றன்றோ எவரும்?

பொன் பொருளை நம்பிடலாமோ?
மிளிரும் தூசியில் விசுவாசம்?
பறந்திடும் புகை நீ பற்றிடவோ?
ஆண்டவர் வாக்கை நம்பாமல்.

அவர் குரல் ஓர்நாள் ஓலித்திட்டதே,
மீண்டும் மீண்டும் கேட்டிட்டதே,
அவர் வல்லமை என்றும் நித்தியமே,
பயந்து நாம் நம்பிட மிக நலமே.

அவர் வல்லமை என்றும் தனித்து வரா,
கிருபையும் உடன் வரும் சிம்மாசனம்.
உம் தயவும் நீதி நியாயங்களும்,
பகிரலாமோ? எம் வெகுமதிகள்.