வில்லியம் பிரீமேன் லாயிட், கைப்பிரதி இதழில் மார்ச் 1824 (My Times Are in Thy Hand). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 12, 2019),
பிராங்கோனியா (கோனிக்), ஹோமின்ஸ்ச்சர் லைடர் ஷாட்ஸ் பிராங்க்பர்ட் ஜெர்மனி 1738 (🔊 pdf nwc).
என் காலம் உம் கையில்,
அவ்வாரே வாஞ்சிப்பேன்,
என் வாழ்வு ஆன்மா நண்பரும்
நான் வைத்தேன் உம்மிடம்.
என் காலம் உம் கையில்,
எவ்வாரிருப்பினும்,
இன்பம் துன்பம் ஒளியிருள்
நன்றானதுமக்கு.
என் காலம் உம் கையில்,
எனக்கேன் சந்தேகம்,
நீர் என் தந்தை கைவிடீரே
நான் கண்ணீர் விடேனே.
என் காலம் உம் கையில்,
நீர் குருசில் மாண்டீரே,
என் பாவம் உம் கை துளைத்தே
இப்போதென்னைக்காக்க.
என் காலம் உம் கையில்,
நீர் என் காப்பாளரே,
உம் கை வீணே நீளுமோ?
நீர் என்றும் என் தாபரம்.
என் காலம் உம் கையில்,
நான் என்றும் நம்புவேன்,
நான் மாண்ட பின்பு என்றும் நான்
உம் வலப்புறமே.
ஆமேன்.