வில்லியம் டிட் மேட்சன் தி இன்னர் லைப் (லண்டன் எலியாட் ஸ்டாக் 1866) எண் 40 திருத்தப்பட்டது (Oh, Blessèd Life!). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 6, 2019),
டியூக் ஸ்டிரீட், 1793 ஜான் சி ஹேட்டன் அவர்கள் இயற்றியதாக கருதப்படுகிறது (🔊 pdf nwc).
ஆசீர் வாழ்வின் நல் நிம்மதியே,
சீற்றம் குழப்பங்களின்றியே,
மேலோக திருச்சித்தம் அவ்விதமே,
அதுவல்லால் எனதல்ல.
ஆசீர் வாழ்வில் நம் உள் மனதில்,
காலம் எச்சூழலைக்காட்டிடினும்,
கிருபையும் இரக்கமும் இருந்திடுமே,
புதிரெதிராக தோன்றினும்.
ஆசீர் வாழ்வில் நம் உள்ளம் பொங்கி,
சாவின் பயம் முற்றும் காணாதே,
நம் புத்திக்கெட்டிடாதே அவர் அறிவார்,
அவர் அன்பால் வான் திறந்திடுமே.
ஆசீர் வாழ்வில் சுயம் சரீரம்,
நம் சிந்தை தன் ஆவல் இல்லாமல்,
எல்லாவற்றிலும் தேவசித்தத்திற்கே,
உண்மையாய் நாம் ஒப்படைப்போம்.
இவ்வாழ்வு தூய்மையும் தெய்வீகமாய்,
மேல் நோக்கி ஏங்கும் சம்பூரணம்,
எம் வாஞ்சை தீரும் மீட்பரே,
இவ்வாழ்வை ஆசீராக்கிடுமே.