நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.@கலாத்தியர் 6:14
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஜார்ஜ் பெர்னார்ட், 1913 (The Old Rug­ged Cross), இப்பாடல் மிச்சிகேனிலுள்ள அல்பியான், அல்லது போக்கோன், அல்லது ஸ்டுய ர்ஜியோன் பே, விஸ்கொன்சின் ஆகிய இம்மூன்று இடங்களிலும் தங்கள் ஊரில் எழுதப்பட்டது என சொல்லிக்கொள்கிறார்கள். சௌ. ஜான் பாரதி (மார்ச் 29, 2019),

தி ஓல்டு ரகெட் கிராஸ், ஜார்ஜ் பெர்னார்ட், 1913 (🔊 pdf nwc).

portrait
ஜார்ஜ் பெர்னார்ட்
1873–1958

தூர ஓர் குன்றின் மேல் நின்றதோர் சிலுவை
ஈனமாம் இழி சின்னமாமே,
நானும் நேசிக்கிறேன் எந்தன் அன்பர் இயேசு
பலியான அச்சிலுவையே,

பல்லவி

நான் அச்சிலுவையின் மேன்மையே,
பாராட்டி அவர் பாதமே,
என்னையும் என் யாவையும்
வைத்தே ஜீவ கிரீடமே பெற்றுக்கொள்வேன்.

ஈன மா சிலுவை உலகே சபிக்கும்
ஆனால் என்னையே கவர்ந்ததே,
தேவ ஆட்டுக்குட்டி விண்ணை தள்ளி வந்து
அதை கல்வாரியில் சுமக்க,

பல்லவி

தூய மா இரத்தத்தின் கறை பார் தெய்வீகம்
அதோ தோன்றுதே அழகதே,
அதில் தான் ஆண்டவர் துன்புற்றே மரித்தார்
என்னை மன்னித்தே இரட்சித்திட,

பல்லவி

நானும் என்றென்றுமே உண்மையாய் இருப்பேன்
அதன் சாபமும் தாங்கிடுவேன்
அவர் ஓர் நாளிலே என்னையும் அழைப்பார்
அங்கே என்றென்றும் மகிமையே.

பல்லவி