உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.@லூக்கா.2 அதிகாரம் 14
உருவப்படம்
வில்லியம் அகஸ்டின் ஆக்டன்
1841–1897

வில்லியம் அகஸ்டின் ஆக்டன், 1870 (On a Christ­mas Morn­ing). சௌ. ஜான் பாரதி (அக்டோபர் 16, 2020),

வில்லியம் அகஸ்டின் ஆக்டன் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

தூதர் என்ன பாடினார்? இனிமை, ஆனந்தம்,
ஆம் இனிமையாய் பாடினார்,
பூமியில் சமாதானம், இனிமை, ஆனந்தம்,
ஆம் பூமியில் சமாதானம், கிறிஸ்மஸ் அன்று காலை,

பல்லவி

கிறிஸ்மஸ் அன்று காலை. ஆ ஆனந்தம்,
ஆ ஆனந்தம், நம் வல்ல இராஜன் பிறந்தாரே,
மீட்ப்பராக, நம்மை மீட்க
விண்ணை விட்டு மண்ணிலே
ஆம் நம்மை மோட்சம் சேர்க்கவே.

தூதர் தந்த ஆசி என்ன, ஆனந்தம், இதுண்மையே,
ஆம் இதுதானவ்வாசியே, கிறிஸ்மஸ் அன்று காலை,
மனிதர்மேல் பிரியம், தூதரே, சொன்னாரே,
ஆம் மனிதர்மேல் பிரியம், கிறிஸ்மஸ் அன்று காலை,

பல்லவி

சிறார்கள் ஏன் பாடவேண்டும், இனிமையாய், ஆனந்தமாய்,
சிறார்கள் ஏன் பாடினர் கிறிஸ்மஸ் அன்று காலை,
பெத்லேகேமில் பிறந்தார், பாலனாக, இராஜனே,
ஆம் பெத்லேகேமில் பிறந்தார், கிறிஸ்மஸ் அன்று காலை,

பல்லவி

ஆம் நாமும் கூடி பாடுவோம், இன்பமாய் மகிழ்ந்தே,
ஆம் நாமும் கூடி பாடுவோம், கிறஸ்மஸ் அன்று காலை,
ஆம் மகிமை அவருக்கே, இன்பமாய், மகிழ்ந்தே,
ஆம் அன்பு சமாதானமே, கிறிஸ்மஸ் அன்று வந்ததே.

பல்லவி

illustration