தியோடர் மோனார்ட் (1836–1921) (சுர் டோய் ஜே மி ரிப்போஸ்) மொழிபெர்த்ததவர் தெரியவில்லை நாங்கள் கண்டதில் மிகப்பழைமையானது சில்டுரன்ஸ் ஹிம்னல் கிறிஸ்டியன் யியர் (தொகுப்பு: கிறிஸ்டியன் ஹென்றி பேட்மேன்) லண்டன் ஜான் ஹாட்ஜஸ் 1872. எண் 150. சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 27, 2019),
எல்லாகோம்ப், கேசாங்புச் டெர் ஹர்சொகில் விரிட்டன்பெர்க்கிஸ்சென் கோத்தோலிஸ்சென் ஹோப்காபேலே வுருட்டன் பெர்க் ஜெர்மனி 1784, அடாப்டட் & ஹார்மொனைஸ்ட் பை வில்லியம் மோங்க் ஏன்ஷியன்ட் மார்டன் 1868 அப்பன்டிக்ஸ். எண் 366 (🔊 pdf nwc).
உம்மில் என் உள்ளம் ஓய்ந்தே காத்து நிற்கிறதே,
வேறென் செய்வேன் நான் பாவி, தேவாதி தேவனே,
உம் ஒளி எந்தன் ஞானம், உம் அன்பில் நிலைப்பேன்,
ஆம் ஆண்டவா உம் வீடே நெருங்குதென்னாளும்.
என் பாவம் குற்றம் அதிகம் உம் கிருபை பெரிதே,
ஓர் பாவம் செய்யா நீரே, மாண்டீரெனக்காக,
உம்மோடு ஈடில்லாமல், மண்ணின்று மீண்டேனே,
உம் இரத்தம் எந்தன் பொக்கிஷம் உம் வாக்கென்னம்பிக்கை.
என் மூலமே என் ஆண்டவா உம் சித்தம் செய்யுமே,
அர்ப்பணித்தேன் என்னை முற்றும் நான் பெலவீனனே,
நான் ஆற்றல் அற்றோனாயிருந்தும், வரியோனாயிருந்தும்,
நான் செல்வந்தன் தான் உமது ஐஸ்வர்யத்தால்தானே.
இருளின் மேகம் சூழ்ந்தாலும் என்னோடிருக்கிறீர்,
என் அவிஸ்வாசம் நீக்கி, ஆன்மாவை தேற்றுவீர்,
உம் மார்பில் சாய்ந்தே நானும், உம் முகம் காண்பேனே,
பகைஞர் என்னை வீணே கூடாமல் தள்ளினும்.
நீர் தந்ததே என் ஆனந்தம் விடுதலையுமே,
வேரே யாரை புகழுவேன், உம்மையன்றி நானே,
உலகின் ஆஸ்தி நீரூற்றும் இல்லாதேயொழிந்தும்,
உம் கிருபை என்னில் தங்கும் நான் வாழ்ந்து சாமட்டும்.
ஆமேன்.