சபின் பேரிங் கௌள்ட், 1864 (Onward, Christian Soldiers). சௌ. ஜான் பாரதி (செப்டம்பர் 20, 2019),
தூய. ஜெர்ட்ருட் ஆர்த்தர் செய்மோர் சுலிவன், 1871 (🔊 pdf nwc).
முன்னே செல்வோம் வாரீர், போர் முனை செல்வதுபோல்,
சிலுவை கொடி ஏந்தி,பின்னே நாம் செல்வோம்.
இயேசு நம் தலைவர், முன்னே செல்கிறார்,
நாமும் பின்னே செல்வோம்,சிலுவைக்கொடி பின்னே,
பல்லவி
முன்னே செல்வோம் வாரீர்
போர் முனை செல்வதுபோல்
இயேசு நம் தலைவர்
நாம் பின் செல்வோமே.
அவர் நாமம் சொல்ல, சாத்தான் ஓடுவான்,
வாரும் நீரும் வீரர், வெற்றி நோக்கியே,
நரகத்தின் தூண்கள், அதிரும் படியே,
போற்றும் துதி ஓசை, அதிர செய்திட,
பல்லவி
வல்ல சேனை போல செல்லும் சபையே,
முன்னே சென்றார் தூயோர், நாம் பின் செல்கின்றோம்,
ஒன்றே நாம் எல்லோரும், ஓர் சரீரமே,
ஓர் விஸ்வாசம் ஓர் நம்பிக்கை, ஒன்றே சேவையாம்,
பல்லவி
சிம்மாசனம் கிரீடம் இராட்ஜியம் ஒழியும்
ஆனால் கிறிஸ்து ஆட்சி, என்றும் நிலைக்கும்
நரகத்தின் வாசல், சபையை அசைக்காதே,
நமக்குண்டு கிறிஸ்து வாக்கு என்றும் மாறாதே.
பல்லவி
வாரும் நீங்கள் யாவரும் திரள் கூட்டமாய்,
ஆனந்தமாய் பாடி, சேர்ந்து துதிக்க,
துதி கனம் மகிமை, கிறிஸ்து ராஜர்கே,
தூதர் மாந்தர் கீதம் காலா காலமாய்.
பல்லவி