எம் பாவம் யாம் ஒப்புக்கொள்கிறோம்,
உம் வார்த்தை கேளாமல்,
கொஞ்சமே உண்மை தயவும்,
உம் வார்த்தை யாம் கேளாமல்.
பொய் கூறி கென்று திருடியே,
ஆம் வேசிகளாகியே,
இரத்தத்திற்கு இரத்தம் என்று,
சமாதானம் வெறுத்தே.
எம் பூமி வீணாயிப்போனதே,
யாம் ஞானம் தேடாமல்,
அழிந்தே போவோம் மாய்ந்தே யாம்,
உம்மை யாம் மறந்திட்டால்.
பொன் வெள்ளியும் வைடூர்யமும்,
வீணென்றறியாமல்,
கன்ணற்றோராய் ஆம் மூடராய்,
வீணாக வேண்டி நின்றே.
எம்மீதிலே உம் தண்டனை,
சாபங்கள் யாவுமே,
கர்வமும் பெருமையுள்ளோராய்,
மகிமை போய் வெட்க்கமே.
உம் வார்த்தை மேன்மை காட்டிடும்,
உம் கிருபையும் அதே,
போதகள் மூலம் தாருமே,
யம் தூய ஞானமே.
தயை கூர்ந்தே தள்ளாமலே,
உம்மை யாம் காணவே,
எம் பாதை செவ்வையாக்கியே,
கிருபையால் காத்திடும்.
உடைத்துருக்கும் எம் உள்ளத்தை,
உம் வார்த்தை கேட்கவே,
தாழ்மையாக எம் உள்ளத்தை
உமக்கே தந்திட.