நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.@யூதா 22–23
உருவப்படம்
பேனி கிராஸ்பி
1820–1915

பேனி கிராஸ்பி, 1869 (Res­cue the Per­ish­ing). சௌ. ஜான் பாரதி (2018),

ஹோவார்ட் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

2016 ஆம் ஆண்டின் இறுதியில் தென்னிந்திய திருச்சபைககளின் ஆங்கில சபைகளுக்கான பொதுவான பாடல் புத்தகத்திற்கான பாடல்களை தேர்வுசெய்யும் பணியின்போது Rescue the Perishing பாடலை முதல் முதலாக கண்டெடுத்தேன், ஆண்டவர் இயேசுவின் முழு அன்போடு கூறப்படும் மிக நேரடியான வார்த்தைகளும், மேலும் இந்த பாடலை இயற்றிய பார்வையற்ற சகோதரியின் குறிப்பும், கண்களிலிருந்து நீர் வழியச்செய்தது. இப்பாடலை அனைவரும் கற்றுக்கொண்டு மின்னணு தெடர்பு கருவிகளின் ஈர்ப்பால் மரண பாதாளத்தை நோக்கி சீரழிந்து சென்றுகொண்டிருக்கும் இக்கால இளைய சமுதாயத்தினருக்காக கரிசனையுடன் பாடவேண்டும் பாடுவது மட்டுமின்றி செயலிலும் காண்பிக்கவேண்டும், இப்பாடலின் தமிழாக்கம் ஒன்றை கண்டும் அது தற்காலத்திற்கேற்ப இல்லாததினால், ஓரு ஆராதனைவேளையில் ஆழமற்ற ஒரு சொற்பொழிவின்போது இருபது நிமிடங்களில் மொழிபெயர்த்தேன், என்பதை மறைக்காமல் ஒப்புக்கொள்கிறேன்.

சௌ. ஜான் பாரதி, 2018

அழிவோரை காப்போம்,
மரிப்போரை மீட்போம்,
பாவத்தில் சிக்கியே பாதாளம் வீழ்ந்தார்,
கண்ணீரோடே அணைத்தே,
தூக்கியெடுத்தே, ஆண்டவர் இயேசுவின்
வல்லமையை சொல்வோம்.

பல்லவி

அழிவோரை காப்போம்
மரிப்போரை மீட்போம்,
இயேசு தயாபரர், மீட்க வல்லோர்.

கடின மனதுடன்
தூரச்சென்றிடினும்
பொறுமையாய் இருந்தவர்
சேர்த்தணைப்பாரே,காத்து நிற்கின்றார்,
அன்பாய் அழைத்தே,
மன்னித்தே மீட்பார் நம்பினோரை.

பல்லவி

சாத்தானின் பிடியால்
நொருங்குண்ட மனதில்
புதைந்த நற்செயல்களை
மீண்டும் ம(அ)ருள்வார்,
அன்புடன் கரம் நீட்டி தொட்டு
அருள் கனிவுடன்
அறுந்த நரம்பினை இசைக்கச்செய்வார்.

பல்லவி

அழிவோரை காப்போம்,
கடமையை உணர்வோம்,
வல்லமையின் தேவன் பெலனளிப்பாரே,
குறுகிய வழிதான் பொறுமையாய் ஜெயிக்க
கர்த்தர் உயிர் தந்தார் நமக்கென்று சொல்வோம்.

பல்லவி