உலக பந்தம் அறும் நாள் வருமே,
அப்போது நான் இப்போதுபோல்,
பாடுவேனோ?, ஆனால் ஆனந்தமே,
பல்லவி
என்றும் அவரைக்காண்பேன்
கிருபையால் நான் பெற்ற
இரட்சிப்பினை சொல்லுவேன்.
உலக வீடு விழுமே அதெப்போதோ?
நான் அறியேன், ஆனால் அதோ,
ஆம் எனக்காய், அங்கே ஓர் வீடுண்டு,
பல்லவி
உலக சூர்யன் மங்குமே நம் மேற்கிலே,
அப்போதென் ஆண்டவர் சொல்வார்,
நன்று செய்தாய் என் பிள்ளையே நீ வா,
பல்லவி
அந்நாள் வரை காத்திருந்து
ஒளிருமே என் விளக்கு, திறப்பாரே,
அவ்வாசலை என் மீட்ப்பர் எனக்காய்.
பல்லவி